அடையாளம் தெரியாத ஆண் பிணம்

வைகையாற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது.

Update: 2021-07-14 17:25 GMT
திருப்புவனம்,ஜூலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த மடப்புரம் கிராமத்தில் வைகை ஆற்றுப்பகுதியில் கணக்கன்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அருகே சுமார் 53 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் அங்கு சென்று  பார்வையிட்டனர். அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்ேகயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இறந்த நபர் வெள்ளைநிற வேஷ்டி, மஞ்சள் நிற சட்டை அணிந்திருந்தார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்