திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 74 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 49 ஆயிரத்து 242 பேர் குணமடைந்து உள்ளனர். 1,070 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.
இதுவரை மாவட்டத்தில் 624 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.