கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.

Update: 2021-07-14 17:15 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 844 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 பேர் நேற்று குணமாகினர். இதுவரை 39 ஆயிரத்து 887 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 644 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
இதனிடையே கிருஷ்ணகிரியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்