மலைப்பாம்பு முட்டைகளுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த வாலிபர்களால் பரபரப்பு

மலைப்பாம்பு முட்டைகளுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த வாலிபர்களால் பரபரப்பு

Update: 2021-07-14 17:07 GMT
அன்னவாசல், ஜூலை.15-
அன்னவாசல் அருகே பனங்குடி காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாறைக்குள் மலைப்பாம்பு ஒன்று 10-க்கும் மேற்பட்ட முட்டைகளுடன் அடைகாத்து கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து அன்னவாசல் ேபாலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றும் 10-க்கும் மேற்பட்ட முட்டையுடன் வந்த இளைஞர்களை பார்த்து முதலில் அச்சம் அடைந்த போலீசார் பின்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அந்த பாம்பையும், முட்டையையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் இருந்து மலைப்பாம்பு மற்றும் முட்டைகளை பெற்ற வனத்துறையினர் அதனை நார்த்தாமலை காப்பு காட்டுக்குள் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்