காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்;

Update: 2021-07-14 17:05 GMT
குன்னத்தூர், 
குன்னத்தூர் அருகே நவக்காடு ஊராட்சி ஒருக்காம்பாளையம் காலனியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி நாவக்காடு ஊராட்சித் தலைவரிடம் கேட்டபோது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போரில் தண்ணீர் திடீரென்று வற்றிவிட்டது. உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருந்தேன். ஆனால் பெண்கள் இவ்வாறு காலிக்குடங்களுடன் சாலை மறியலுக்கு வந்துவிட்டனர். 
எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் குழாயிலிருந்து மாற்று ஏற்பாடாக குடிநீர் வினியோகம் செய்து தருகிறோம் என்றும்,  அதற்கான பணிகள் விரைவாக நடைபெறும் என்று கூறினார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்