தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

போடியில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-14 16:59 GMT
 தேனி :  


தேனி மாவட்டம் போடி ஜக்கம்மநாயக்கன்பட்டி போஸ் பஜாரை சேர்ந்தவர் அழகுராஜா. ஜவுளி வியாபாரி. இவரது மகன் லோகேஷ் (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக லோகேஷ் சொந்த ஊருக்கு வந்தார்.

 அதன்பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய தந்தை தட்டிகேட்டதாக தெரிகிறது. 
இதில் ஆத்திரமடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தையின் கையை வெட்டினார். 

இதில் காயமடைந்த அழகுராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசில் அழகுராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ேலாகசை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்