வேடசந்தூர் அருகே காங்கிரசார் சைக்கிள் ஊர்வலம்

வேடசந்தூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2021-07-14 16:55 GMT
வேடசந்தூர்:
காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் வேடசந்தூர் வட்டார தலைவர் காசிபாளையம் சாமிநாதன் தலைமை தாங்கினார். 
இதில், மாவட்ட தலைவர் சதீஷ்குமார், எரியோடு நகர தலைவர் சண்முகம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி மற்றும் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை வட்டார நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
எரியோடு நால்ரோடு பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியில் முடிவடைந்தது. 

மேலும் செய்திகள்