கோவிலில் நகை-பணம் திருட்டு

போடி-முந்தல் சாலையில் மலையாளத்து பகவதியம்மன் கோவிலில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-07-14 16:53 GMT
தேனி : 

தேனி மாவட்டம் போடி-முந்தல் சாலையில் மலையாளத்து பகவதியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் குரங்கணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே போலீசார் அங்கு வந்து பார்த்தபோது கோவிலில் இருந்த பித்தளை விளக்குகள், ஒலிப்பெருக்கி கருவிகள், சாமியின் 4 கிராம் தங்க தாலி, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்