ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-14 16:48 GMT
சாயல்குடி, 
சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிராமம் ராமையா குடியிருப்பு பகுதியில்  60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கன்னிராஜபுரம் கடற்கரை சாலை வரை செல்லும் ஊராட்சி பாதையின் குறுக்கே தனியார் நிறுவனம் தடுப்புச்சுவர் கட்டி உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதையடுத்து இதற்கு தீர்வு காண வலியுறுத்தியும், வருவாய்த்துறையை கண்டித்தும் கன்னிராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்