செயல்விளக்க திடல் அமைப்பு

பயிர்களில் உயர் விளைச்சல் கிடைக்க செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டது.

Update: 2021-07-14 16:43 GMT
நயினார்கோவில், 
நயினார்கோவில் வட்டார வேளாண்ைம உழவர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின்கீழ் பய னாளிகள் தேர்வு செய்யப்பட்டு உயர் விளைச்சல் செயல் விளக்க திடல்கள் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் தக்கைப்பூண்டு, பசுந்தாள் உர சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி நயினார்கோவில் வட்டாரத்தில் வைகை உப வடிநில பகுதிகள் உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி  மண் வளத்தை மேம்படுத்தும் தக்கைப ்பூண்டு பசுந்தாள் உரப் பயிர் செழித்து வளர்ந்துள்ள பாண்டியூர் கிரா மத்தில் வேளாண்மை துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா ஆய்வு செய்தார். அப்போது பசுந்தாள் உரங்களை களர், உவர் நிலங்களில் நன்கு வளர்ந்து நிலத்தை சீராக்கினால் மண்ஈரம் பாதுகாக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் கே.வி.பானு பிரகாஷ், வேளாண்மை அலுவலர் நித்யா, உதவி வேளாண்மை அலுவலர் லாவண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்