கலவை பகுதியில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு
கலவை பகுதியில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு.
கலவை,
கலவை தாலுகா வளையாத்தூர் பகுதி கிராமங்களில் விவசாயிகள் நெற்பயிர், நிலக்கடலை, வாழை மற்றும் தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர். சமீபத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 25 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர். மேலும் விவசாயிகள் வேளாண்மை துறைக்கு மனு கொடுத்தனர்.
அதன்பேரில் திமிரி வட்டார வேளாண்மை அலுவலர் திலகவதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயிர் தேசங்கள் குறித்து கணக்கு எடுத்தார். உடன் உதவி வேளாண்மை அலுவலர் கே.சங்கர், கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயந்தி, மதன்ராஜ் மற்றும் வேளாண்மை துறை, வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.