மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலியானது.

Update: 2021-07-14 15:08 GMT
கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலியானது.
விவசாயி
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மொடச்சூர் கிராமம் ரோஜாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 77). விவசாயி. இவர் 20 ஆடுகள், 6 மாடுகளை வளர்த்து வருகிறார். 
நேற்று காலை 8 மணிஅளவில் அருகில் உள்ள காலி இடத்தில் ஆடுகளை மேயவிட்டு மோகன்ராஜ் வீட்டுக்கு சென்றிருந்தார். சிறிது நேரத்தில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டது. இதனால் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதிக்கு மோகன்ராஜின் மகன் அருள்முருகன் விரைந்து சென்று பார்த்தார். 
6 ஆடுகள் பலி
அங்கு ஒரு சினை ஆடு உள்பட 6 ஆடுகள் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 
அப்போது ஆடுகளின் உடலில் மர்ம விலங்கு கடித்த தடயங்கள் இருந்தன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொடச்சூரில் மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்