திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-07-14 15:03 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை இதுவரை பெறாத திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து 19 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கினார். 

அப்போது அனைத்து திருநங்கைகளும் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். திருநங்கைகள் குழுக்களாக இணைந்து உங்களின் பிரச்சினைகளை, தேவைகளை மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தார. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்ணன், நடராஜன், காஞ்சனா, செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்