தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-07-14 14:38 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாணிக்கம் (வயது 55). இவர் தெர்மல்நகர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி சண்முகபுரம் பிராப்பர் தெருவை சேர்ந்த முருகன் (49) என்பவர் வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டினாராம். ஆனால் மாணிக்கம் மறுத்ததால் கத்தியால் குத்த முயன்றாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்