தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்கி சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்கி சங்கிலி பறிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி பொட்டலூரனி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து. இவருடைய மனைவி காந்திமதி (வயது 52). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் தூத்துக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று விட்டு மதியம் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். அவர் பொட்டலூரணி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, செக்காரக்குடி ரோட்டில் நடந்து சென்றாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.37 ஆயிரத்து 500 என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.