2-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் காவல் கோர்ட்டு உத்தரவு
2-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் காவல் வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 79). மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்தனர். மற்றொரு மாணவிக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.
கோர்ட்டில் ஆஜர்
இது குறித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்குக்காக அவர் நேற்று செங்கல்பட்டில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடத்திய போகச்சோ கோர்ட்டு நீதிபதி தமிழரசி அவரை 15 நாட்கள் கோர்ட்டு காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே அவர் ஒரு போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் மற்றொரு போக்சோ வழக்குக்காக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தந்தது.