சிம்கார்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக கூறி மோசடி: மாநகராட்சி ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.85 ஆயிரம் ‘அபேஸ்’
சிம்கார்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக கூறி மோசடி: மாநகராட்சி ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.85 ஆயிரம் ‘அபேஸ்’.
பூந்தமல்லி,
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, வாட்டர் டேங்க் சாலையை சேர்ந்தவர் பாலன் (வயது 73), இவர் சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் இவர், கடந்த 10-ந் தேதி அவருடைய செல்போனில் பயன்படுத்துவதற்காக புதிதாக சிம்கார்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதையடுத்து, பாலனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் உங்களது சிம்கார்டை செயல்படுத்த (ஆக்டிவேட்) செய்ய வேண்டுமென்றால் நாங்கள் அனுப்பக்கூடிய குறுஞ்செய்தி லிங்க்கை அழுத்தி ரூ.10-ஐ செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மோசடியை உண்மை என்று நம்பிய அவர் அந்த லிங்கிற்குள் சென்று ரூ.10-ஐ செலுத்தினார். இதையடுத்து சற்று நேரத்தில் பாலனின் வங்கி கணக்கிலிருந்து ரூ.86,500-ஐ எடுத்ததாக குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலன் உடனடியாக நேற்று அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட அரும்பாக்கம் போலீசார், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கப்பதிவு செய்த அண்ணா நகர் சைபர் கிரேம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.