தாம்பரம் கோர்ட்டு வளாகத்தில் முகாம்: நீதிபதிகள், வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி
தாம்பரம் கோர்ட்டு வளாகத்தில் முகாம்: நீதிபதிகள், வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி.
தாம்பரம்,
தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தியதன் மூலம் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்கள் மூலம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை அடுத்த தாம்பரம் கோர்ட்டு வளாகத்தில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடுபத்தினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது,
இந்த முகாமை தாம்பரம் நீதிமன்ற சார்பு நீதிபதி என்.சுல்தான் ஆரிபின் தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், தாம்பரம் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்துக்கொண்டனர். அப்போது, உரிய மருத்துவ பரிசோதனையுடன் வக்கீல் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.