புள்ளம்பாடி அருகே பெண் தற்கொலை; கணவர் கைது

புள்ளம்பாடி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-13 22:19 GMT
கல்லக்குடி, 
புள்ளம்பாடி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் தற்கொலை
புள்ளம்பாடி அருகே பு.சங்கேந்தியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 38). இவருடைய மனைவி அஜித்தா(30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் மதியம் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த அஜித்தா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, அஜித்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
கணவர் கைது
இந்தநிலையில் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமான அவருடைய கணவரை கைது செய்ய வேண்டும் என்றும் அஜித்தாவின் உறவினர்கள் லால்குடி ரவுண்டானாவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்ைத நடத்தினர். பின்னர், அஜித்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கை மாற்றம் செய்து, அவருடைய கணவர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்