போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தென்காசி மாவட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2021-07-13 21:53 GMT
தென்காசி:
டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 40 போர்வெல் லாரிகள் உள்ளன. அவை அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து சங்க கவுரவத்தலைவர் சங்கரநாராயணன் கூறும்போது, சில மாநிலங்களில் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் மாநில அரசு வரியை குறைத்து உதவ வேண்டும் என்றார். 

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேணுகோபால், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் திருநாவுக்கரசு, உதவி செயலாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மேலும் செய்திகள்