ஆசிரியர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஆசிரியர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஹபீப் முகம்மது (வயது 38). ஆசிரியர். இவர் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்துள்ளார்.
இதேபோல, கமுதி அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (19) என்பவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ளார். இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரைகளை ஏற்று மாவட்ட கலெக்டர், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்படி இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.