குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை
ரோந்து பணி
குளித்தலை போலீசார், அய்யர்மலை சிவாயம் பிரிவு சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து அந்த புகையிலை பொருட்களை எடுத்து வந்த திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சூரம்பட்டி வடக்குதெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஏ.உடையாபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (54) ஆகிய 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
பறிமுதல்
மேலும் அவர்களிடமிருந்த ரூ.15 ஆயிரத்து 90 மதிப்புள்ள 21 கிலோ எடைகொண்ட புகையிலை பொருட்களையும் மற்றும் ரூ.24 ஆயிரத்து 800-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.