நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

Update: 2021-07-13 19:22 GMT
மதுரை, ஜூலை
மதுரை கீரைத்துறை வேதபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (வயது 28). இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் அமுதவள்ளி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அவர் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் திருடனை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த திருடன் தப்பி ஓடி விட்டான். இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை பறிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்