மூதாட்டிகள் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
அரியலூர் மாவட்டத்தில் மூதாட்டிகள் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 49, 61 வயதுடைய 2 ஆண்கள், 70, 60 வயதுடைய 2 மூதாட்டிகள் என சிகிச்சை பலனின்றி மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 41 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 384 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 784 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,251 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.