3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குன்னம் வட்டம் முருக்கன்குடி தெற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பிரேம்குமார் என்ற பிரேம்நாத்(வயது 24), குன்னம் போலீசாரால் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட கீழப்பெரம்பலூர் மேலத்தெருவை சேர்ந்த தொட்டி என்ற ரமேஷ்(39), கிழக்குத்தெருவை சேர்ந்த திருவளவன் மகன் முத்துகுமார்(31) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று 3 ேபரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார்.