பயணிகள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்

பொள்ளாச்சியில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-07-13 18:16 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

சமூக இடைவெளி இல்லை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவல் காரணமாக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, கோபாலபுரம், நடுப்புணி, நெகமம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. 

நீண்ட நேரத்திற்கு பஸ்கள் வருவதால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறும் நிலை ஏற்படுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு

பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து கோபால புரம், ஆனைமலை, குடிமங்கலம், நடுப்புணி உள்ளிட்ட கிராமங் களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கு குறைவாக பஸ் களை இயக்குவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளது. 

இதன் காரணமாக பயணிகள் கூட்டத்தோடு, கூட்டமாக பயணம் செய்ய வேண்டிய உள்ளது. பெரும்பாலும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நெருக்கமாக நிற்பதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தனியார் மற்றும் அரசு பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டும் ஏற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதிகளவில் பயணிகள் 

ஆனால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கூட்டம், கூட்டமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதை கண்காணித்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. 

எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும். அத்துடன் கூடுதல் பஸ்களையும் இயக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

பயணி கள் கூட்டம் குறைவாக உள்ள வழித்தடங்களில் இயக்கும் பஸ்களை, கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்