போக்சோவில் தனியார் பஸ் டிரைவர் கைது
பெரியகுளம் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பஸ் டிரைவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
போடி:
பெரியகுளம் அருகே உள்ள காமாக்காபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், 28 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சதீஷ்குமார் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போடி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.