பொய்கை சந்தையில் குவிந்த மாடுகள். ரூ.1½ கோடிக்கு விற்பனை
பொய்கை சந்தையில் குவிந்த மாடுகள்
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக மாட்டுச்சந்தை மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாட்டுச்சந்தை கூடியது. ஏராளமான கறவை மாடுகள், மற்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
இதில், 500-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் விலை உயர்ந்த கறவைமாடுகள் விற்பனையானது. ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை காய்கறி சந்தை நடைபெற்றது.
இந்த வாரம் முதல் ஏலம் எடுத்த உரிமையாளர்கள் சந்தையில் கடை போட்ட வியாபாரிகளிடம் சுங்க வரியை வசூல் செய்தனர்.