தொழிலாளிக்கு அடி-உதை; 5 பேர் மீது வழக்கு

இளையான்குடி அருகே தொழிலாளிக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-07-13 17:34 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (என்ற) ரவி (வயது 42). தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் மகன் சந்தோஷ் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அசோக்குமார் என்ற ரவியை வழிமறித்த சந்ேதாஷ், அவருடைய நண்பர்கள் ஹர்ஷித்(19), திலகர்(20), மதிவாணன்(45), மற்றொரு சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து அடித்து உதைத்தாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்