வனத்துறை அதிகாரி ஆய்வு

தேனி மாவட்டம் வருசநாடு அருகே சூரங்குட்டம் மலையடிவாரத்தில் செந்நாய்கள் கடித்து 23 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.;

Update: 2021-07-13 17:33 GMT
தேனி : 

தேனி மாவட்டம் வருசநாடு அருகே சூரங்குட்டம் மலையடிவாரத்தில் தர்மராஜபுரத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவருடைய 23 ஆடுகள் செந்நாய்கள் கடித்து நேற்று முன்தினம் பலியாகின. இதில் 11 ஆடுகள் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மற்ற 12 ஆடுகளின் உடல்களை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவை கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் சம்பவ நடந்த சூரங்குட்டம் மலையடிவாரத்துக்கு தேனி மாவட்ட வனஉயிரின காப்பாளர் சுமேஸ்சோமன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிதம்பரத்துக்கு அரசு நிவாரண தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 மேலும் மலையடிவாரத்தில் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்