குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்;

Update: 2021-07-13 17:32 GMT
கீரமங்கலம், ஜூலை.14-
கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் தெற்கு பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சிறுமின்விசை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த பல வருடங்களாக தண்ணீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குடிநீர் வழங்கும் முயற்சி செய்த போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்திருந்தது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1½ லட்சத்தில் புதிய மோட்டார் வாங்கப்பட்டு ஆழ்குழாய் கிணற்றில் இறக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் குடிதண்ணீர் வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் நேற்று காலை பேராவூரணி சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் ஜியாவுதீன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதில், ஒரு வாரத்தில் மின் இணைப்பு பெற்று குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்