திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 2 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 2 பேர் கைது

Update: 2021-07-13 17:25 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அருணபுரம் கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் 1000 லிட்டர் சாராய ஊறல், 50 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி(வயது 55), மொட்டையன்(45) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்