தாராபுரத்தில் வேன் மோதி 5 வயது சிறுவன் பலி

தாராபுரத்தில் வேன் மோதி 5 வயது சிறுவன் பலி

Update: 2021-07-13 17:17 GMT
தாராபுரம், 
தாராபுரம் வடதாரை காமன் கோவில் தெருவை சேர்ந்த சந்தான பிரபு என்பவரின் மகன் சரவணன் (வயது5). இவன் தனது பாட்டியுடன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு இருவரும் காமன்கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் பிரசித் என்பவர் திருப்பூரிவிருந்து வேனில் பனியன் லோடு ஏற்றிக் கொண்டு தாராபுரம் வழியாக தூத்துக்குடிக்கு செல்ல  வந்து கொண்டிருந்தார். 
அப்போது வேன் பாட்டியுடன் நடந்து சென்ற சரவணன் மீது மோதியது.அதில் தலையில் பலத்த அடிபட்ட சரவணனை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.  சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சரவணன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். விபத்து  குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் பிரசித்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்