அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரேஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரேஆர்ப்பாட்டம்
திருப்பூர்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடுப்பூசி வழங்குவதில் தமிழ்நாட்டிற்கு பாகுபாடு காட்டக்கூடாது. காலதாமதமின்றி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சதாம், துணைச் செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கீதா, நரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.