பல்லடம் அருகேதாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
பல்லடம் அருகேதாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பாச்சாங்காட்டுபாளையத்திலிருந்து அருள்புரம் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் தொங்குகின்றன. இந்த சாலையின் வழியாக தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மேலும் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவது குறித்து மின் வாரியத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. எனவே தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகள் ஏதாவது வாகனம் மேல் உரசி விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.