138 பேருக்கு கொரோனா தடுப்பூசி

138 பேருக்கு கொரோனா தடுப்பூசி;

Update: 2021-07-13 16:24 GMT
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை ஊராட்சிக்குட்பட்ட குருக்கள்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள். சவுமியா, குணப்பிரசாத், நடமாடும் மருத்துவக்குழு டாக்டர விஜய்குமார், கிராம சுகாதார செவிலியர்கள் குமதவல்லி, சரஸ்வதி, மருத்துவமனை செவிலியர் பிரைட் சிங், சுகாதார ஆய்வாளர் தேவராஜன் தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். குருக்கள்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள், முதியோர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இதன்படி நேற்று ஒரே நாளில் இப்பகுதியை சேர்ந்த மொத்தம் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்