எட்டயபுரத்தில் முககவசம் அணியாத 25 பேருக்கு அபராதம்
எட்டயபுரத்தில் முககவசம் அணியாத 25 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலையில் எட்டயபுரம் பாரதி மணி மண்டபம் அருகே தூத்துக்குடி- கோவில்பட்டி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாத 25 பேருக்கு தலா ரூ.200 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த 10 லாரிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து சீட் பெல்ட் அணிவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.