அம்மா உணவக பெண் ஊழியரை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

அம்மா உணவக பெண் ஊழியரை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு.

Update: 2021-07-13 10:47 GMT
சென்னை,

சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் வாணி (வயது 45). இவர் புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியராக வேலை செய்கிறார். அவர் நேற்று காலை 5.30 மணி அளவில் வேலைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். சூளை பகுதியில் ஆட்டோவை விட்டு இறங்கினார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வாணியை தாக்கி கீழே தள்ளி விட்டு, அவர் வைத்திருந்த கைப்பையை பிடுங்கிச்சென்று விட்டனர். அந்த பைக்குள் 3 பவுன் தங்க சங்கிலி இருந்ததாகவும், அதை மீட்டுத்தரும்படியும் வாணி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்