ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு நெல் மூட்டைகள் கடத்தல்; 7 லாரிகள் பறிமுதல்
ஆந்திராவிலிருந்து திருட்டுத்தனமாக தமிழகத்திற்கு நெல் மூட்டைகள் லாரிகளில் கடத்தப்பட்டு வருவதாக திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும்குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று திருவள்ளூரை அடுத்த எளாவூர் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து திருட்டுத்தனமாக உரிய ஆவணம் இன்றி நெல் மூட்டைகளை கொண்டு வந்த 7 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதிலிருந்து தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.