வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தாய் கண்டித்ததால், மாந்தோப்பில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சண்முகம் (வயது 24). இவர் குடிக்கு அடிமையாக இருந்ததாக தெரிகிறது.

Update: 2021-07-13 05:42 GMT
இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறாயே என அவரது தாய் சண்முகத்தை கண்டித்துள்ளார்.இதில் மனமுடைந்து காணப்பட்ட சண்முகம் நேற்று ஸ்ரீபெரும்புதூர் பட்டுநூல் சத்திரம் பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்