தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இந்து மகாசபாவினர் மனு

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி இந்து மகாசபாவினர் மனு கொடுத்தனர்.

Update: 2021-07-12 22:32 GMT
தென்காசி:
அகில பாரத   இந்துமகா  சபா   மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று மாலையில் தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிறது. எனவே கும்பாபிஷேகம் நடத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணியை செய்து வரும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். அதே நேரத்தில் இந்து கோவில் சொத்துகளை இந்துக்களுக்கு மட்டுமே அனுபவத்திற்கு கொடுக்க வேண்டும்’ என்றார்.

மாநில பொதுச்செயலாளர் முத்தப்பா, மாவட்ட தலைவர் தங்கதுரை, பொதுச்செயலாளர் சிவா, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கோபி, நகர இளைஞரணி தலைவர் அன்பு என்ற பாஸ்கர், துணைத்தலைவர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்