போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

நெல்லை அருகே போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2021-07-13 02:58 IST
நெல்லை:
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியின் உறவினர்கள் நள்ளிரவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்