புதுமண தம்பதிக்கு பெட்ரோலை பரிசாக வழங்கிய நண்பர்கள்

திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு பெட்ரோலை நண்பர்கள் பரிசாக வழங்கினர்

Update: 2021-07-12 20:53 GMT
கே.கே.நகர்
 இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் ரூ.102-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் பலர் சைக்கிள்களுக்கு மாறி வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி, கே.கே.நகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்த முனியசாமி-மாரியம்மாள் தம்பதியின் மகன் வெங்கடேஷ் என்பவருக்கும், சங்கரன் கோவிலை சேர்ந்த ஜெயராணி என்பவருக்கும் நேற்று கே.கே.நகரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பலர் மணமக்களுக்கு பல்வேறு பரிசுகளை அன்பளிப்பாக அளித்தனர். அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் 2 பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி புதுமண தம்பதிக்கு பரிசாக வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட தம்பதி புன்னகை புரிந்தனர்.

மேலும் செய்திகள்