பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 6 பவுன் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது;
கே.கே.நகர்
திருச்சி விமான நிலையம், டி.எஸ்.என். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மனைவி ஜெயசீலா (வயது 47). இவர் நேற்று மாலை கே.கே.நகரில் உள்ள மருந்து கடைக்கு ஸ்கூட்டரில் சென்று மருந்து வாங்கிக்கொண்டு ராஜாராம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயசீலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து அவரது கணவர், கே.கே.நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.