சிவகாசி
சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அம்மன் கோவில் அருகில் சிலர் காசு வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 54), பாண்டி(51), முத்து முருகன்(35), கருத்தப்பாண்டி(38), முருகேசன் (63), மாரிசாமி(30) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.