மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்
மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
தோகைமலை
தோகைமலை போலீஸ் சரகத்திற்குட்ட தொண்டமாங்கினம் ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 27). இவர் நேற்று முன்தினம் மொபட்டில் தோகைமலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே புலியூர் காந்திநகர் காலனியை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக மருதுபாண்டி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மருதுபாண்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மருதுபாண்டியை மீ்ட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.