மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விவசாயி பலி;
காவேரிப்பாக்கம்
நெமிலி தாலுகா திருமால்பூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருமால்பூரிலிருந்து ஓச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓச்சேரி- அரக்கோணம் நெடுஞ்சாலை ஆயர்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.