தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
நொய்யல்
கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் காகித ஆலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஹரிஷ் ஏழுமலை முன்னிலை வகித்தார். கொரோனாவால் உயிரிழந்த காகித ஆலை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிறைவு செய்யாமல் முக்கியமான பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் விடக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.