அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மரங்கள் வெட்டியதை கண்டித்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மரங்கள் வெட்டியதை கண்டித்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-12 17:39 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு முத்துக்குமாரசாமி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள், பூங்காவில் ரூ.7 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வகம் கட்ட முடிவு செய்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது. இந்த நிலையில் ஆய்வகம் கட்டுவதற்காக பூங்காவில் இருந்த மரங்களை வெட்டியதாக தெரிகிறது. 

ஆர்ப்பாட்டம் 

இதை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பேராசிரியர் பழனிவேல் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சமூக சிந்தனையாளர் பேரவை, நெய்தல் இயற்கை பாதுகாப்பு இயக்கம், பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது, மரங்கள் வெட்டியதற்கு கண்டனம் தெரிவிப்பது,  வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்