பனைக்குளம்,
ராமநாதபுரம் பெரியபட்டினத்தை சேர்ந்தவர் காதர்ஷா. டீக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் இவரது குடும்பத்தினர் அரியமான் கடற்கரைக்கு சென்று பொழுது போக்குவதற்காக சென்றுள்ளனர். இவரது மனைவி அனீஸ் பாத்திமா, மகள் சுலைஹா (வயது7) மற்றும் 7 பேர் சீனியப்பா தர்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு கடற் கரைக்கு சென்ற சிறுமி கடலில் இறங்கி விளையாடிய போது அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதா பமாக உயிரிழந்தாள். சிறுமியை காணாமல் அரவது தாய் மற்றும் உறவினர்கள் கடற்கரை முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதன்பிறகு மண்டபம் கடலோர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீ சார் மற்றும் பொதுமக்கள் கடலில் தேடியபோது சிறுமி சடலமாக மீட்கப்பட்டாள். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரியபட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.